Chat with ME !

Copyrights..

Protected by Copyscape DMCA Copyright Detector

Sunday, April 24, 2011

வாழ்க்கை


முயன்று முட்டித்தள்ளி : தன் ஓட்டினை உடைத்து, 

           வெளியேறியது ஓர் பறவை குஞ்சு ,

                 இறகு முளைக்கும் வரை இலக்கின்றி தன் கூட்டில்,                    

வாழ்வதற்கு முதன் முயற்சியாம்' 

  சிறகை விரித்தது 

      உயர்ந்த மர உச்சியில் ! 


Tuesday, January 4, 2011

கவிதையும் பொய்களும் !

                        
     கவிதைகள் என்றால் பொய்கள் என்பர் , 
    பொய்களில் ஒளிந்துள்ள உண்மையான காதலை உணரமறுக்கும் உள்ளத்திற்கு
 உவமைகள் உவர்ப்பே !




நன்றி !





உதறினேன் உறவுகளை !உறவினர்களை விட உயர்வானவர்கள் நண்பர்கள் என கண்டதால்  ,
அலட்சியபடுத்தினேன் நண்பர்களை அனைத்து உறவுகளையும் உன்னில் கண்டதால் !
 நீயே உலகென்று கருதிய எனக்கு உணர்த்திவிட்டாய் உண்மையை ,
என்றும் எனக்கு நானே துணை என்று !